வாரம் நாலு கவி: ஐணனத்தில்

by admin 3
52 views

ஜணனத்தில் வரமான தாயின் முத்தம்
கையிலேந்திய தந்தையின் கணத்த (கர்வ) முத்தம்
சகோதரியின் சீண்டலில் பிஞ்சு முத்தம்
வாழ்த்த வந்தவரின்  எதார்த்த முத்தம்பள்ளி பருவத்தில்  பாராட்டு முத்தம்
பூப்படைந்ததும் விலக்கு; முத்தத்திற்கு விலங்கு
பாசம் மறைந்து பாதகம் துளிர்க்கிறது
முத்தத்தில் பிரிவினை பாசம்,  வேசமென;
கலப்பட யுகத்தில் கண்ணிய முத்தமில்லை!!!
என் வயிற்று மழலைக்கும் போதிப்பேன்……

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!