ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம்
மறு கன்னத்தைக் காட்டுவது பழமை
ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம்
ஒரு மனிதரைக் கொல்லும் காலமிது
வன்முறை நீக்கமற நிறைந்த காலம்
நன்முறை கற்காததன் நடைமுறைக் கோலம்
கன்னத்தில் கைவைத்துக் கலங்குவது அந்தக் காலம்
எண்ணத்தில் தற்கொலை தோன்றி
ஈடேற்றுவது இக்காலம்
தன்னம்பிக்கையால் சவால்களை எதிர்கொளும் நேர்வு
நன்னம்பிக்கை ஈன்றோர் கற்பித்தலே தீர்வு
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: ஒரு
previous post