ஒவ்வொன்றிற்குமே விலை உண்டு மறுக்கத்தான் முடியுமோ?
அறிந்தே செய்திடும் பாவத்தின் விலை
துன்பம்
அளவுக்கு மீறிய ஆசையின் விலை
இழப்பு
தகாத உறவு ஈந்திடும் விலையாய் எய்ட்ஸ்
புகையெனும் பகைவன் தரும் சன்மானமாம் புற்றுநோய்
படியில் பயணம் நொடியில் மரணம் அறிந்தும்
அலட்சியம் விலையோ மதிப்பிட முடியா இன்னுயிர்
சுயத்தைப் பறைசாற்ற அபாய வளைவில் செல்ஃபிகள்
சுயமே தொலையும் ஆபத்தில் முடியும் உணர்வீரோ?
செலவைக் கழித்து வரவைப் பெருக்கிடல் நலமே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: ஒவ்வொன்றிற்குமே
previous post