ஓட்டுக்குள் உடல் சுருக்கி
தகவு கொள்ளும் ஆமைகள்
பகரும் உண்மை ஒன்றுதான்
புலன்கள் அடக்கி வாழ்தலே
அமரருள் உய்க்கும் கேளீரோ….
அகவை நூறு தாண்டியும்
வாழும் ஆமையால் முடியுமெனில்
வள்ளுவன் கூற்றின் வழி
புலன்களடக்கி பிறவிப் பெரும்பயன்
அடைய நம்மாலும் முடியும்தானே?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: ஓட்டுக்குள்
previous post