கடவுளின் துகளாய் கரு சேர்ந்து
கவின் மொட்டாய் பிறை நிலவாய்
ஒவ்வோர் அணுவாய்
அருவத்திலிருந்து உருவேற்று
உன்னைக் காண உலகைக் காண
இருதயம் பெற்று
இசையும் பெற்று
அகத்தை அகமகிழ்த்த
ஆசையாய் காத்திருந்தயெனை
கருணையின்றி கருவிலிருந்து
பிய்த்தெரிந்தாயே தாயே
எண்ணக் கழிவிற்கு
என்னைக் கரைத்தாயோ
குற்றப்பத்திரிக்கை வாசிக்கவா
சுயநியாயம் கேட்கவாவென்றறியேன்
வேண்டுதலின் வேண்டாக்
கழிவாய் கிடக்கின்றதோ
இறைவனின் நீதிமன்றத்தில்
எங்களின் முறையீடும்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: கடவுளின்
previous post