கண்டம்தனில் கடும்விடம்
சேர்க்கும் வல்அரவும்
உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்
சிந்தையில் புதையும்
சீறும் சினமானது
அழுக்காறாய் சதியுணர்வாய்
திரிந்து பிறக்கும்
நஞ்சான குரோதம்
கொண்டவன் கொண்ட
உயிரொன்றை விடுத்து வேறத்தனையையும் அடியோடழிக்கும்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: கண்டம்தினில்
previous post