கரண்டியோ கணிணி செலுத்தும் மௌசோ
கையாள்வது
பெரிய வித்தையல்லவே பழகிட்டால் சித்திரமும் செந்தமிழும்
போலத்தான் …தத்தை நடையும், குதலை மொழியும்
பருவம் கடந்திடின் மாறுதல் இயல்பே அன்றோ?
கயிற்றில் நடப்பதும் வித்தை மாயாஜாலமும்
வித்தையே
கண்ணாமூச்சி தொடங்கி பொய்க்கால் குதிரை ஆட்டம்
வரையாய் எங்கும் எதிலும் பொழுதுபோக்காய் வித்தையே
வித்தை ஒன்று கைவசம் இருந்திட்டாலே
வாழ்வும் வசப்படுமே
ஆட்டுவிப்போன் கையில் நாம்..ஆடாமல்
என்செய்ய
நூலாய் அவன்.. பொம்மையாய் நாம்.. ஆடிக்களித்திடுவமே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கனண்டியோ
previous post