கன்னம் கிள்ள தூண்டும் பட்டு
கள்ளம் இல்லா முல்லைமொட்டு
கொள்ளை சிரிப்பு மின்னல் வெட்டு
கொஞ்சம் அழகினில் உச்சுக் கொட்டு
மென்மை இதழோ மழலை கன்னம்
மேனி உரசிட அனிச்சம் எண்ணும்
வான்மதி பார்த்து முகிலில் முட்டும்
வாயின் ஓரம் பனியென சொட்டும்
கன்னம் என்ன? தேன் கிண்ணமா?
முத்தங்கள் அதிலே அன்பு சின்னமா?
“சோழா” புகழேந்தி
வாரம் நாலு கவி: கன்னம்
previous post