கன்னி கழிவது கட்டாய மன்று
கன்னி அவளின் இலக்கு இன்று
எண்ணியபடி மக்கட் சேவை செய்வது
எண்ணம் போல் வாழ்வு சிறப்பது
திருமணமும் குழந்தைப் பேறும் நன்று
திருமண வாழ்வு மட்டுமே வாழ்வென்று
திருவாய் மலர்பவர்க்கு கன்னியின் வாழ்வு
வெறுவாய் மெல்பவர்க்கு என்றும் தாழ்வு
கன்னியாய் ஆற்றிய சமூக சேவை
எண்ணிப் பார்த்திடின் தியாக சேவை
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: கன்னி
previous post