கன்னி என்பது பெண்மை இல்லை
கன்னிப் போர் வீரரின் முயற்சி
கன்னித் தீவு இயற்கையின் மலர்ச்சி
கன்னியா குமரி இளமையின் நீட்சி
கன்னித் தமிழ் அழியாப் புதுமை
கன்னி என்பது என்றும் இளமை
கன்னி என்பது மாறா வளமை
கன்னி என்பது முதன்முதல் நிகழ்வு
கன்னி என்பது பெண் அல்ல
கன்னியென்பது பெண் மட்டும் அல்ல!!
பூமலர்