வாரம் நாலு கவி: கழிவுகள்

by admin 3
58 views

கழிவுகள் யாவும் மறுசுழற்சிக்குத்  தயாராய்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
பழங்குப்பைகள் கூட்டி எரிக்கும் பொங்கல் நன்னாளாம் போகித் திருநாளில் மட்டும்தானா?
ஒவ்வொரு  கழிவிலும் புதிதாய் ஒரு
தொடக்கம் இருளின் கழிவில் விடியல்
மணித்துளிகளின் கழிவில் அடுத்தடுத்த பொழுதுகள்
நினைவின் கழிவாம் மறதியும் நன்றேயாம்
தேக்கியே வைப்பின் அழுகும் அன்றோ?
கழிவுகள் அகற்றியே நலமாய் வாழ்வோமே…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!