கழிவு என்றால் முகம் சுழிப்பதா?
காற்றில் கலந்து வருவதென நினைப்பதா?
தங்கத்தின் கழிவு
விலை மதிப்பற்றது
திமிங்கில வாந்தி
அம்பர்கிரீஸ் மணக்கிறது.
பூக்களின் கழிவு
வாசனை திரவியமாகுது
பூனையின் கழிவு
கோரோசனமாகிறது.
நெகிழியின் கழிவு
நடக்கும் சாலையாகிறது.
நெல்லின் கழிவு
கால்நடை தீவனமாகிறது.
தேங்காய் மட்டையில்
காளான் விளைகிறது.கழிவென்பது இழிவல்ல
மறு உருவாக்கமே…
“சோழா” புகழேந்தி