காடுகளே வீடுகளாய் சற்றே அலுத்ததில் ஒரு
நாள் நகர்வலம் வர விலங்குகள் சில ஆயத்தமாகியே சென்றிட ஆங்கே மனிதரின்
ஐயோ கரடி…ஆ அதோ புலி
சிங்கமென.. பயந்திட்ட மரண ஓலம் கேட்டதில்
பிடரி தெறித்தே கானகம் திரும்பிட்ட விலங்குகள்
யாவும் வன தேவதையிடம் சென்றே முறையிட …
இருப்பிடம் வைகுந்தம் உணர்வீர்…
மாக்களே …அதோ
தொலைவில் மனிதர்கள் ஜாக்கிரதை…சொல்லி மறைந்திட…
ஆறறிவு உயிர்களே உணர்வோம் காப்போம்
வனப்பொக்கிஷங்களை…
நாபா.மீரா
வாரம் நாலு கவி: காடுகளே
previous post