காதலன் காதலி பகிரும் முத்தம்
திருமண பந்தம் நிலைத்திடும் சத்தம்
காதல் காமம் அன்பு மரியாதை
அனைத்தும் உணர்த்திடும் ஒற்றை முத்தம்!
தாய்மையும் மழலையும் பேசிடும் சத்தம்
காரணம் இல்லா ஆயிரம் முத்தம்!
மொழிபல நாடுபல என்றே ஆனாலும்
அனைவருக்கும் புரிந்திடும் மொழியே முத்தம்!
ஊமையும் செவிடனும் குருடனும் கூட
பகிர்ந்திட முடிந்த மொழியே முத்தம்!!
பூமலர்