காதலில் கழிவு
நானுமோர் கழிவல்லவோ பிண்டமாய் பிறக்கையில்..
வார்த்தைகள் கழிவல்லவோ நீ மௌனிக்கையில்…
புலனமும் கழிவல்லவோ தூர லாஸ்ட் சீனில்…
அறிந்திடா நின் பெயர் அறிவேனோ..
பார்த்திடா நின் உருவம் தொடுவேனோ..
மன்மதம் நீ என மயங்கினேனோ..
மாதுவே உன் மடி சேர்வேனோ..
காதலியே கள் நீயென உரைத்தேனோ…
ஏனடி நான் உனக்கு கழிவானேனோ…
இளவெயினி