காலைக் கதிரின் ஸ்பரிசம் தடுக்கும் வெண்பனியே!
மாலை மலரின் வாசம் கெடுக்கும் உணவுகளே!
குயிலின் கீதம் குலைத்துப் பாடும் வானொலியே!
மகவின் மழலை ரசிக்கத் தடுக்கும் பணிச்சுமையே!
காதலின் மயக்கம் மறக்கச் செய்யும் மனச்சோர்வே!
குடும்பத்தின் அன்பை வெறுத்திட வைக்கும் கைபேசியே!
நீங்கள் எல்லாம் தொல்லை என்றே தெரிகிறதே
தெரிந்தும் விடுத்துப் பிரிய வழியும் தெரியலியே!!
பூமலர்
