காலைச் சூரியனைத் தழுவும் மலர்கள்
மலரின் இலையில் மெல்லிய மழைத்துளி
மழை இடையே விழும் வானவில்
வானவில் வண்ணமாய் உன் அழகு
அழகு கன்னத்தில் என் பார்வை
பார்வை எழுதிய கவிதை ஓவியம்
ஓவிய சுருக்கத்தில் சின்ன சிரிப்பு
சிரிக்கும் சாயலில் மழை ராகம்
ராகம் பாடியே மகிழ்ச்சி மலர
மலர்ந்த கன்னத்தில் விழுந்த
துளி
துளிர்த்த நாணத்தின் சிவப்பான கன்னங்கள்
கன்னங்கள்….
காதலின் பரிமாணங்களைப் பேசும் கவிதையானதே!
என் கவிதை கொள்ளும்
அழகின் அடையாளங்களே!
நா. பத்மாவதி