குழந்தைப் பருவத்தில் விளையாட்டில் வேகம்
இளமையில் சிநேகத்தில் வேகம்
வாலிபத்தில்
மோகத்தில் வேகம்
தேகத்தில் வேகம் உள்ளவரை
போகத்தில் மோகம்
தேகத்தின் தாகம் தீர்ந்த பின்னர்
யாகம் செய்தால் போதுமா? நம்
சோகம் தான் தீருமா?
விவாகம் முடிந்த பின்னர்
பாகம் பிரித்த பின்னர்
சிநேகமுடன்
விவேகமுடன்
வாழ்க்கையில் நிதானித்து
அமோகமுடன் வாழ்வதே யோகம்
!
மு.வைரமணி