கூடு கட்டிக் குஞ்சுதனை அடைகாத்திடத்
துடித்திடும் பறவைகள்.. கன்று ஈன்று
பாலூட்டும் பசுக்கள்.. பேறுகாலம் பெருந்தவம்
அன்றோ கருவறையில் சுமந்திடும் உயிர்தனுக்கு
முறைதவறிச் சுமந்து கருவறையைக் கல்லறையாக்கிடுதல்
பாவமன்றோ.. பேறுகாலத்தின் பின்னே
குலைந்திடுமாம்
உடல் வனப்பு… ஆக குழந்தை பெறுவதே கேள்விக்குறி ஆயிற்றே இன்று இளநங்கையரிடையே…
இது தகுமோ.. இது முறையோ..
கருக்கொள்ளத் துடிக்கும் சூலின் கண்டனம்….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கூடு
previous post