சாலையில் நாபியை நிரப்ப மழலையின் வித்தை
காட்டும் குடும்பத்தின் வாழ்வாதாரமே கயிற்றில் நடந்து
கிடைக்கும் பணத்தில் ஒரு வேலை உணவினை
தடையின்றி கிடைக்கச் செய்வது வித்தை கலை
வாயில்லா ஜீவனான வானரமும் மனிதனுடன் சங்கமித்து
தாய் சேய் மனமுவந்து வித்தை செய்து
மனிதனுக்கு உதவுவதை நோக்கில் வித்தை ஒன்றும்
பெரிதல்ல என உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு
மெல்லிய மன வருத்தமுடன் வித்தை செய்பவனை
இரக்கத்துடன் ரசித்து பண உதவி செய்கிறதே
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: சாலையில்
previous post