சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்
மடந்தையில் முகாமிடும்
முத்துப் பருக்களையும்
மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்
உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்
நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்
மணிவயிறு நிரம்பிட
மணந்திடும் காப்பையும்
மழலையின் மலரிதழ்
பன்னீர்க் குளுமையையும்
ஒட்டித் தழுவிடும்
ரெட்டைக் கோளம்
சுருங்கிச் சொல்லிடுமே நெருங்கிடும் எல்லையை!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: சினத்தின்
previous post
