சில்லறை இல்லை வீசி வந்தேன் வார்த்தைகளை பிச்சைக்காரனிடம்
வறுமை…
ஓட்டு வீட்டின் ஒழுகளில் சாரல் மழை…
கொசுவர்த்தியின் புகையில் தூங்கா தூக்கம்
தலையணை இல்லா கையணை
உறக்கம் களைக்கும் சூரியன்
ரசிக்க முடியாத நிலா
ஓட்டுப் போட்ட உடை
வேண்டாமென அழித்த குழந்தை
உணவான தண்ணீர்
உறவான தேநீர்
சேர்த்து வைக்கப்பட்ட நோட்டாகா சில்லறைகள்
அட்டை இன்றி அட்டை போட்ட புத்தகங்கள்…
பக்கத்து வீட்டு வானொலி பாடல் எதிர் வீட்டுத் தொலைக் காட்சி
செல்வமென பெரிதாய் நிறைந்தே இருந்தது என் இளமைக் கால வறுமைகள்…
கார் கதவை திறந்து இறங்கிய வுடன் சுவற்றில் மோதி கீழே விழுந்தேன்… கனவென அறியாமல் உடல் குறுக்கி உறங்கினேன் புறாக் கூட்டில்…
கங்காதரன்…