சிவப்பு காரமணி
மண்ணில் நான் புதைத்த மாணிக்கம்
கருவாகி உருவாகி தளிர் விடுமே!
இரு மாதம் பாதுகாத்த பொக்கிஷமாய்
நெற்பயிர் போல் தலைசாய்த்து சிரித்திடுதே!
விண்வெளியில் பயிராகும் இந்தியாவின் முதற்பயிரே!
வாண்வெளி ஆராய்ச்சியில் தளிற்பாதம் பதித்துவிட்டாய்!
விண்ணிலும் மண்ணிலும் மருந்தாகி விருந்தாகி
புத்தம்புது பரிணாம வளர்ச்சியில் அமிழ்த்திவிட்டாய்!!
பூமலர்