சுற்றிச் சுழன்றிருக்கும் ஏணிப்படியைப் போல
சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் தாயனை
சுற்றும் பூமியிலே முற்றென முடிவிலாதாய்
சுழலச் செய்திடுமே உயிரனைத்தையும் உயிரணுவினாலே
தாயினை தாயென ஆக்கிடும் தாயனை
தனையனைத் தந்தே தந்தையெனும் தரமுமாக்கிடுமே
உலகுல உடல்களில் வெவ்வேறு தாயனையே
உடலினுள் அனைத்தணுவும் ஒரே தாயனையாய்
ஏன் இப்படி வாழ்க்கையென்றே எண்ணுகின்றோம்
ஏணிப்படிகளே(தாயனையின் வடிவம்) வாழ்க்கையை நிர்ணயிப்பது அறியாதே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: சுற்றிச்
previous post