சுழித்தோட மறுத்து
மண்டியிட்டு நிற்க
நம்மை மக்காக்கி
மக்காத இடத்தில்
மங்காத பொருளாய்
பூரணமாய் பூரிப்புடன்
பூமிப் பந்தில்
புண்ணியத் தலமமைத்து
வற்றா நதிகளையும்
சுற்றமாய்ச் சுற்றிவளைக்க
வலையமைத்துத் தூண்டிலிட
சிக்காத மீன்களில்லை
பல்லுருவம் பெற்று
விற்பனைக்குவாராப் பொருட்களில்லை
வியாபாரமெல்லாம் வியாபித்து
நிற்கத் தூண்டாவிளக்கானாய்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: சுழித்தோட
previous post