தன்னைக் குறிப்பது பெயர் மட்டுமே
பெயருக்கு மாற்றாய் இடுவது குறியே!
படித்தவன் ஓலையில் பெயரைப் பொறிப்பான்
கல்லாதவன் மடலில் தற்குறி இடுவான்!
கோனோலை அரசாணை தாங்கும் என்றால்
நீட்டோலை சுபநிகழ்வு நேரத்தைக் கூறும்!
சாவோலை உறவுகளின் இறப்பைக் கூவ
நாளோலை கோவில்விழா அழைப்பைக் காட்டும்!
படித்தவர்கள் சிலபேரே அன்னாளில் வாழ்ந்திருக்க
அவரெழுத அனுப்புனரோ தற்குறி இட்டிடுவார்!!
பூமலர்