தாங்க முடியாது…!
யாரை
இழந்தாலும்
மறக்க
முடியாது…
நண்பரோ
உறவினரோ
அல்லது
யாரோ…?
இழப்பு
என்பது
மிக
கொடுமை..
நான்
வேலையை
இழந்தேன்
சமூகத்திற்காக..
காதலியை
இழந்தேன்
பணம்
இல்லாததால்…
நல்ல
நண்பர்
தோழர்
இழந்தேன்…!
இழப்பு
என்
வாழ்கையை
கவ்வியது…!
இழந்து
இழந்து
சோர்வு
அடைந்தேன்…!
எல்லா
இழப்பையும்
தாங்கி
கொண்டேன்…!
முடிய வில்லை
ம்மா…
ம்மா…
அம்மா….!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: தாங்க
previous post