தினமும் உதிக்கும் சூரியன்
கலைப்பறியாத கடல் அலை
ஒருநாள் ஆயுளானாலும் மலரும்பூ
அலுப்பின்றி ஓடும் கடிகாரம்
சலிப்பறியாத காற்றின் சலசலப்பு
மொழியின்றி பாடும் குயில்
எண்ணில் அடங்கா அதிசயம்
இறைவனுக்கே தெரிந்த ரகசியம்..
-மித்ரா சுதீன்