தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்
கடந்து வந்த பாதைதனை மறந்திடுவோம்
புதியதோர் உலகம் செய்வோம் அதில்
தெளிவான பாதைகள் வகுத்தே வாழ்க்கையெனும்
ஓடம்தனில் ஆட்டமின்றி கரை சேர வேற்றுமையில் ஒற்றுமையாம் நம் பாரம்பரியம்
உணர்ந்து ஆணவம் மாயை கன்மா
எனும் மும்மலம் களைந்து நிர்மல
வானமாய்த் திரைகள் விலக்கியே
தற்குறித்தனம் நீக்கிப் பயணிப்போம் வாரீர்
நாபா.மீரா
வாரம் நாலு கவி: தெரிந்தும்
previous post