வாரம் நாலு கவி: தேன்

by admin 3
44 views

தேன் சொட்டும் எம்மொழியின்
பிசகிப் பிழையான வார்த்தை
மங்கையவள் மனதில் உறைந்தவொன்றை
அவளங்கங்கள் தீண்டி அழிந்ததென்பது
அடிநாதமறியா ஆதிக்க சமூகம்
அரக்கச்செயலை உயரவுரைக்கும் அவமானச்செயலன்றோ
அறமெனக்காப்பதும் அசுத்தமென்றாக்குவதும் அவள்செயலாகுமே
அதையழிப்பதென்பது யாரினும் ஆகிடுமோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!