தொடர்வண்டி ஓட்டத்திலே யானைக் கூட்டம் பார்க்கவந்தால்
தண்டவாளம் மீதினிலே பிணமாகக் கிடக்கக் கண்டேன்!
மலைமேலே தேயிலையும் ஏலமும் பயிர் செய்ய
காட்டுப்பன்றி மின்வெலி தடுப்பினில் இறந்தது கண்டேன்!
புலியும் சிறுத்தையும் காட்டெருமையும் கரடியும் வனம்விடுத்து
உணவுக்கும் நீருக்கும் மனிதரின் இடம் தேடக்கண்டேன்!
காடழித்து நாடாக்கி மரமழித்து மண்ணாக்கி
வீடுகட்ட
தன்வீட்டைத் தேடி வரும் பாவமந்த விலங்குகளே!
சுயநலத்தின் முழுவுருவாய் மாறிவிட்ட மானிடரின் செய்கையிலே
வனமிழந்த விலங்குகளும் வீடில்லா அகதிகளாய் ஆகிடுதே!!
பூமலர்