தொடுணர்வு கொண்ட மரமும் செடியும் ஓரறிவாம்!
அத்துடன் சேர்ந்து சுவைத்தல் இருந்தால் ஈரறிவாம்!
மூன்றாம் அறிவாய் கூட்டாய் சேரும் நுகர்தலே!
நான்காம் அறிவாய் சேர்ந்திடும் ரெண்டு கண்களே!
செவியில் சத்தம் கேட்பது எல்லாம் ஐந்தறிவே!
அத்துடன் பகுத்து அறிவது என்பது ஆறறிவே!
மனிதன் கொண்ட ஆறாம் அறிவை தீட்டிடவே
கற்றல் தேடல் கற்பனை கொள்வது நுண்ணறிவே!!
பூமலர்