நவீனமெனப் பெயரிட்டுப்
புரிந்தும் புரியாததாய்
அறிந்தும் அறியாததாய்
மாயமான் போல்
சொல்ல வருவதை
சொல்லிற்குள் புதைத்துவிட
புரிந்துகொள்ள முயல
அகராதியும் சோர்விழக்க
எளிய பொருளெல்லாம்
ஏக்கத்துடன் பார்க்க
எழுத்தறம் புதுமையைச்
சுமந்து திரிய
மாற்றமெனும் பெயரில்
போனபோக்கில் போக
உரையாசிரியனைத் தேடி
அடுத்த தலைமுறை!!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: நவீனமெனப்
previous post