நிழற்கரங்கள் விறகாகி
ஏகாந்தமாகிய மொட்டைமரம் – நிற்கிறது
பூமிப்பிளவுக்குள் கவிபாடும் உச்சக் காதலின் எச்சமாய்
விழுந்த வித்தால் நேசம் கொண்ட வேரும் மண்ணும்
ரகசியக் காதலர்களாய் ஒற்றைக் காதலால் நூற்றுக்காகின்றன
பறவைக்கும் பூச்சிக்கும் நறுவீயின் இனிப்பு இதயத்திற்கும்
காதலின் உச்சத்தில் கவிச்சரமாகிக் கனிந்த பிள்ளைமுத்துக்கள்
முதுமை முதுகிலிருந்து இறங்கிக் கடந்த பின்னும்
வேராக மண்ணாக வேறாக்கிவிடாத உயிரீரம் உலர்ந்தபின்னும்
இறுக்கிப்பிடித்துக் காக்கிறது குன்றிப்போன அவனி(ளி)ன் சுவாசத்தை
பிடுங்கப்பட்டாலும் பூமி புரண்டாலும் இக்காதலிலென்றும் பிரிவென்பதில்லை!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: நிழற்கரங்கள்
previous post