நீல வானம்
நீண்ட தூரத்தில்
இருளைப் பிழிந்து
அச்சத்தைத் தர
விழிகளிரண்டும் திறக்க
மறுத்துப் போராட
யாரேனும் பொய்யென்று
சொல்ல மாட்டார்களா
மனமது ஏங்கித்
தவித்துக் கலங்க
போகாத கோவிலில்லை
வேண்டாத தெய்வமில்லை
அத்தனையும் கனவாகப்
போய் விடாதா
கதிரவன் கண்ணைத்
திறக்க அழைப்புவிட
விழித்த பின்தான்
அத்தனையும் கனவென்பது
ஆண் கன்னியாவது
பொருளற்ற வாழ்க்கை!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: நீல
previous post