நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவே
நுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதே
நன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோ
நின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு நாடாநிலையென
நான் நகைத்திருந்திட நீ நகர்ந்திடும் நாடகமுமேனோ
நம்பிக்கை நானடைய நலமதை நீயுரைத்து நீங்கிடவே
நீங்குமுன்பு நஞ்சதை நாவிலேற்றி நறுக்கென நவின்றுவிடில்
நெஞ்சம் நிறைந்த நல்லுறவை நாசமாக்கவியலுமோ நு(நி)ண்ணறிவினாலே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: நுண்ணறிவின்
previous post