நெடுநாளுக்குப் பின்னர்
வெளியுலகப் பார்வை
ஏதுமறியா உன்னை
விட்டுச் செல்லவதா?
நிச்சயமாய இங்கிருந்து
கிளம்பத்தான் வேண்டும்
பொழுது சாயுமுன்
திரும்பி விடுவேனென
முகத்தால் உரசிப்
பாசத்தைப் பகிர்ந்துசெல
துள்ளிக் குதித்து
ஓடிய கன்றுக்குட்டியைக்
கயிற்றின் பிடிக்குள்
களவாடப்பட்டுக் கட்டப்பட
சிறகுகளில்லாமலும் பூமியைப்
பம்பரமாய்ச் சுற்றி
அழுதும் பசியை
அறிவிக்க முடியாமல்
தாயின்மடியை முத்தமிடக்
காத்திருந்தது கன்று!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: நெடுநாளுக்குப்
previous post