படைத்தவள் பனிவயிற்றில்
பவிசாய் பவனிவந்து
பதினெட்டுப்பத்து கோணத்தில்
மானாய் குதித்து
காற்றைக் கிறங்கடித்து
கண்டம்வரை இரைசேர
களிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்
கானல்நீராய் தலைதாண்டி
உடற்தாண்டி வால்தாண்டி
வற்றிப்போய் வஞ்சிக்க
அகதியாக மறுத்து
கோட்டுத்தழும்பு கொண்ட
அவள் வயிற்றில்
கருவாடாகக் கிடக்கின்றன
ஏரி மீன்கள்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: படைத்தவள்
previous post