பட்டுப்பூவாய் பூவினிதழாய் இதழினும் மென்மையாய்
பட்டாம்பூச்சியென சுற்றியே திரிந்திடும் சிட்டுச்சிறுமியுன்
சின்ன சிரிப்பில் சிவக்கும் கன்னமும்
வண்ண வண்ணமாய் வானவில் போலாகவே
என்னென்று சொல்லுவேன் என் எண்ணமெல்லாமும்
உன்னன்பு உடனிருப்பதால் உள்ளமும் உவகையாகுதே
கன்னத்தோடு கன்னம் தேய்க்கும் மழலையுந்தன்
கனிந்த முத்தம் நித்தமெனக்கு கிடைத்திடவே
யுத்தம் கூட பல செய்திடுவேன்
சித்தமாகுமோ
நித்தமென் கன்னம் தேய்ப்பா(யோ)யா..!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: பட்டுப்பூவாய்
previous post