வாரம் நாலு கவி: பணம்

by admin 3
10 views

பணம் பதவி பகட்டினிடை
பாமரர்கள் வாழுவதும் தீவினிலே
தனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே
இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்
இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடை
எச்சமென  உறவுநிலை உணர்ந்தே
உச்சமென உயருறவளித்தே விலகினாயே
துச்சமென்றாகியே தீவினுள் தீவாகினேனே!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!