பழையன கழித்து புதியன புகுதல்
தோலைக் கழித்து சுளையை சுவைத்தல்
களையைக் கழித்து விளைச்சல் எடுத்தல்
கல்லைக் கழித்து சிற்பம் வடித்தல்
கற்பனை கழித்து நிகழ்வில் நிற்றல்
பொய்மை கழித்து வாய்மை கூறல்
பாவம் கழித்து புண்ணியம் தேடல்
கழிவு என்பது ஒவ்வாமை அன்று
தேவை அல்லாத விடயம் எல்லாம்
கழிக்கத் தெரிந்தால் வாழ்வே நன்று!
பூமலர்