பால்வண்ணன் அண்ணன்
விழியொளியால் தீட்டுகிறான்
விழிசேர்பவற்றை ஓவியமாய்!
கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்ட
கடனாய் கேட்கிறான்
நீலத்தை நீள்வானிலே!
வானும் மறுத்துச்சிவக்க
அக்கினியாய் அழன்றவன்
ஆவேசமாய் தரையிறங்குகிறான்
தீட்டிய ஓவியங்களை
சரசரவென அழித்து!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: பால்வண்ணன்
previous post