வாரம் நாலு கவி: பிரிந்துப்

by admin 3
46 views

பிரிந்துப் போனவளின் அன்புக்காக ஏன்
இவ்வளவு ஏங்கி தவிக்கிறேன் பேரன்பே..?
யாருமின்றி இருந்தவனை கொண்டாடித் தீர்த்தவளாகிற்றே…
பின் ஏன் தொலைத்தேன்..? காலத்தின்
சதியில் சிக்குண்டு நொந்து கவிதைகளில்
காதலை ஆழமாக சுவாசிக்கிறேன்.. வந்து
முத்தமிட்டு அணைத்துக்கொள்ளடி கழிவென்று தட்டிச்செல்லாதே..
மத்யமராய் இருப்பதொன்றும் சுலபமல்ல பெருஞ்சாபம்..
காதலியை இழந்து வாழ்க்கையை தொலைத்தவனை
தியாகியென்று இந்த உலகம் போற்றும்…!

✍️அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!