புத்தாண்டே வருகவே அனைவர் வாழ்விலும் புதுப்பொலிவு தருகவே நம்பிக்கை விதைகள்
விதைத்து நல்லெண்ணந்தனை பயிர் செய்வதோடன்றி
தீய சக்திகள் யாவும் களையறுப்போம் வாரீர்!
செயற்கை நுண்ணறிவொடு இயற்கையைப் பொருத்தியே
நுட்பமாய் சந்ததிகள் ஆக்கிடுவோமே உத்திகள்
உரியன கொண்டு… இயற்கை விஞ்சிய
சக்திதான் உண்டோ இந்தப் பிரபஞ்சத்தில்
இயற்கையொடு இயைந்து இயற்கையாய் வாழ்தலே
பிறந்த மண்ணிற்கு நம் காணிக்கையன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: புத்தாண்டே
previous post