மன பிம்பங்களின் கடவுச்சொல்
பந்தமாக்கியது உள்ளங்களை
அகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்
அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதர
அகவை வேறுபாடு இல்லாமல்
விழிகள் குருடாகிப்போய்
உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்பட
மண்புழுக்கள் மாட்டாமலே
தானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்
மீட்பாரற்று இளையதலைமுறை
மனக் கணக்கால் தேர்ந்து
மணிக்கணக்கில் உரையாடல்
செல்பேசியெல்லாம் வெப்பக் கடத்தலால்
நொந்துபோய்
வெந்துகொண்டிருக்க
ஆக்க சக்திகளெல்லாம்
இங்கு
அர்த்தமிழந்து நிற்க
வேடிக்கைப் பொருளாய் அன்பு
வில்லேதுமில்லாத அம்புக்குறியாய்
இதயத்தைத் தைத்துக்
காயப்படுத்திவிட்டு சப்தமில்லாமல் அபாயமாகிறது!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: மன
previous post