மனமில்லா நீரினையே இயற்கையன்னை வார்த்திடவே
பலநிறங்கள் புதுமணங்கள் – மலர்களையே வியந்தேன்!
உப்புநீரோ உவர்ப்புநீரோ பெற்றுக் கொண்டு
இனியசுவை கனிகளையே கொடுக்கும்மரம் வியப்பே!
மிதித்தாலும் வதைத்தாலும் அடித்தாலும் உடைத்தாலும்
பொறுத்தாளும் பூமியவள் புன்னகையும் வியப்பே!
பாலூட்டியானாலும் முட்டையிடும் பறவையினம், ஊர்வனவோ
ஆறறிவு பெற்றுவிட்ட மனிதயினம் வியப்பே!!
பூமலர்