மனம் புண்படாத விழாக்
கொண்டாட்டம்
மாந்தர்க்கு நன்மை மலர் வண்டாட்டம்
கூடிக் களித்தலில் இன்பம் பெருகும்
நாடிக் கொண்டாடி நன்மை பயக்கும்
கடன் வாங்கிக் கொண்டாடி இன்புறல்
உடன் கிடைக்கும் வழியே துன்புறல்
மதுவில் திளைத்து மகிழும் கொண்டாட்டம்
விரைவில் நற்பெயர் அடையும் திண்டாட்டம்
துன்பத்தின் வடிகால் ஆகும் நிகழ்வு
இன்பத்தின் நுழைவாயிலில் கிடைக்கும் மகிழ்வு
..பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: மனம்
previous post