மழைச்சாரல்
மண்ணைத் தொடும்முன்
அலையலையாய்
அவசரமாக ஓடி
அங்குமிங்கும்
வரிசையாய்ப் பயணித்து
சக்கரமாய்
மூளையால் துளையிட
மூலை முடுக்குகளில்
நுழைவாயிலமைத்து
தங்களுக்கான
பொறியில் சிக்காமல்
அக்கரையிலிருக்கும்
சக்கரையைப்
பதுங்கிப்போய்
நுனியில் சுமக்குமழகே
அழகு!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: மழைச்சாரல்
previous post