முகமது முழுமையாய் ஒளி பெற
மெது மெதுவாய் வெளிக்காட்டி நின்று
அழகியல் வாசத்தின் சுவாசமாய் வாசமாய்
வசமாய் இரு விரலுக்குள் சிக்கி
மழலைகளின் மனதைப் பதற வைத்துப்
பாசமாய்ப் பலரின் நேசக் கரத்தால்
பக்குவமாய்ப் பேசிப்
பக்கம் வந்து
கொஞ்சிக் கெஞ்சும் கொஞ்சல் நீ
புன்னகைப் பூவைக் குவிக்கக் கன்னமதில்
மதிலமைக்கும் அழகிய கலை நீ!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: முகமது
previous post