முத்தம்..!
பால் வாசனை உன் கன்னம்
சிரித்தால் குழி
விழும் கன்னம்
முகர ஆசை
படும் கன்னம்
குழி பனியாரம்
போல கன்னம்
முத்தம் கொடுக்க
பேர் ஆசை
மீண்டும் மீண்டும்
கொடுக்க ஆசை
கன்னத்தில் வாய்
பதிக்கும் முத்தம்.
உன் கன்னம்
பிடித்த இடம்
கன்னம் காதலியின்
சிவந்த கன்னமா..?
இல்லவே இல்லை.
பேரனின்
கன்னம்….!
ஆர் சத்திய நாராயணன் நன்றி
வாரம் நாலு கவி: முத்தம்
previous post